WE MART கடை திறப்பு விழா
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுக்கா, வடமாதிமங்கலம் கிராமத்தில், WE MART கடை திறப்பு விழா 10.01.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் பட்டாரக சிந்தாமணி ஸ்வஸ்தி ஸ்ரீ தவளகீர்த்தி ஸ்வாமிஜி (ஸ்ரீ ஜெயின் மடம், திருமலை) மற்றும் கல்விக்கோ முனைவர். கோ.விசுவநாதன் (நிறுவுநர்-வேந்தர், விஐடி பல்கலைக்கழகம் மற்றும் தமிழியக்கம் நிறுவுநர்-தலைவர்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ஊர் பெரியவர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் ஊர் தலைவர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.