வேலூர் போக்குவரத்து மண்டலத்திலிருந்து சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சென்னை, ஒசூர், பெங்களூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நாளை 19-ஆம் தேதி 30 சிறப்பு பஸ்கள் சென்னையில் இருந்து வேலூர், ஒசூர், தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஊர்களுக்கு வேலூரில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
20 ஆம் தேதி மதியம் முதல் வேலூரில் இருந்து சென்னை, தாம்பரம் மற்றும் பெங்களூருக்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகளும் 21 ஆம் தேதி முகூர்த்த தினம் என்பதால் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.