திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – ஐந்தாம் நாள் காலை!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஐந்தாம் நாளான நேற்று (08.12.2024) காலை விநாயகர் ரிஷப வாகனத்திலும், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்திலும், வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.