தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்!
தமிழ்நாடு முழுவதும் நாளை ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்களில் சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மையங்கள் செயல்படும்.