
மகாளய அமாவசையை முன்னிட்டு கோவில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வேதாரண்யம் கோடியக்கரை கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு நடத்தினர்.