
புதியதாக 2 லட்சம் பேர் ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்தவர்களுக்கு தேர்தல் முடிந்த பின் பரிசீலித்து புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும். தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. 2.24 கோடி ரேஷன் அட்டைகள் உள்ள நிலையில் அரசு திட்டங்களுக்காக புதிய அட்டைக்கு பலரும் விண்ணப்பம் செய்து உள்ளனர் என உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.