
உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சமையல் சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே உஜ்வாலா திட்ட சமையல் சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. 200 ஆக இருந்த மானியத் தொகையை ரூ. 300 ஆக உயர்த்துவதாக அமைச்சரவையில் முடிவு!