வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று (06.02.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு!
மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி அவர்கள் நேற்று (06.02.2024) வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டி தெருவில் தூய்மைப்பணிகள் குறித்து மாநகராட்சி அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பிறகு, கன்னிகாபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் காலை உணவினை பார்வையிட்டார் மேலும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் அகற்றும் பணிகளையும், மக்கான் சந்திப்பு அருகே பெங்களூர் சாலையில் தேங்கியுள்ள கழிவு நீர் அகற்றுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி மேயர் திருமதி சுஜாதா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் திருமதி ஜானகி ரவீந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.