தமிழகத்தில் 12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (நவம்பர் 16) காலை 9.30 மணியளவில் வெளியிட்டார்.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெறும்.

பிப்ரவரியில் செய்முறைத் தேர்வுகள்:

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12-ல் தொடங்கி பிப்ரவரி 17 வரை நடைபெறுகிறது.
12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை:

பாடங்கள் தேதி
மொழிப் பாடம் 01.03.2024
ஆங்கிலம் 05.03.2024
கணினி அறிவியல், உயிரி-அறிவியல், புள்ளியியல், 08.03.2024
வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் 11.03.2024
இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் 15.03.2024
கணிதம், விலங்கியல், நுண் உயிரியல் 19.03.2024
உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல், பேஸிக் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல், பேஸிக் சிவில் பொறியியல், பேஸிக் ஆட்டோமொபைல் பொறியியல், பேஸிக் மெக்கானிக்கல் பொறியியல், டெக்ஸ்டைஸ் டெக்னாலஜி, ஆஃபீஸ் மேனேஜ்மென்ட் அண்ட் செக்ரட்டரிஷிப் 22.03.2024

தேர்வு முடிவுகள்:
பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 6 ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *