வேலூர்அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் முற்றிலும் தற்காலிக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்.
உளவியலாளர் / ஆற்றுப்படுத்துநர் பொறுப்பிற்கு ஒரு பணியிடம் உள்ளது. அதற்கு விண்ணப்பிக்க இளங்கலை காமர்ஸ் அல்லது உளவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், மாத சம்பளம்: ரூ.15,000
பாதுகாவலர் பொறுப்பிற்கு 2 இடங்கள் உள்ளன. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மாதம் 12,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.
சமையலர் பொறுப்பிற்கு ஒரு பணியிடம் உள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் 10,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.
உளவியலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். பாதுகாவலர்/சமையலர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 33 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருக்க வேண்டும்.
தகுதிவாய்ந்த நபர்கள், விண்ணப்பம் மற்றும் தகவல்களை வேலூர் மாவட்ட இணையத்தில் (http:/vellore.nic.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை உரியசான்றுகளின் ஒளி நகலுடன் நேரிலோ, தபால் மூலமாகவே அல்லது கொரியர் மூலமாகவே இன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, அண்ணா சாலை, வேலூர் – 632 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.