
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில், திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு ரூ. 5.60 லட்சம் மதிப்பிலான பேட்டரி கார் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மதுசூதனன் தலைமை வகித்தார், கோயில் இணை ஆணையர் சி. ஜோதி காருக்கான சாவியை பெற்றுக்கொண்டார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு பேராட்சியர் ஜெகதீசன் கலந்து கொண்டு பேசினார்.
இந்த விழாவில் வழக்குரைஞர்கள் மற்றும் திருவண்ணாமலை பார் அசோசியேஷன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.