பொடிநடையா போறவரே!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!
ஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடையில் கலக்கி வருகிறார். தனுமிதா தற்போது தொடர்ந்து தனது பாடல் திறமையை வெளிப்படுத்தி மேலும் வளர்ந்து வருகிறார்.
சிறுமி தனுமிதாவின் வெற்றி நிச்சயமாக்க, இந்த தருணத்தில், நமது ஆதரவை தெரிவித்து மகிழலாம். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியை பார்த்து தனுமிதாவுக்கு உங்கள் ஆதரவை தாராளமாக அளியுங்கள்.