திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும் ஆனி பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தட்சிணாயின புண்ணிய காலத்தை முன்னிட்டு ஆனி பிரம்மோற்சவ விழா இன்று (07.07.2024) அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள 63 அடி தங்கக் கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.
இந்த நிகழ்வின் போது தங்க கொடிமரத்தின் முன் சிறப்பு அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.